அரக்கோணம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால், முன்று விரைவு ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடி அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் அனவர்திகான்பேட்டை, சித்தேரி ரயில் நிலையங்களுக்கிடையே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது தெரியவந்தது. இதனை கண்ட ரயில்வே ஊழியர் உடனடியாக ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். இதனால் முன்று விரைவு ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் உடனடியாக தண்டவாள விரிசலை தற்காலிகமாக சரி செய்தனர். இதனையடுத்து நடுவழியில் நிறுத்தப்பட்ட ஆலாப்புழா, காவேரி மற்றும் சேரன் விரைவு வண்டிகள் ஒன்றான்பின் ஒன்றாக குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன. இதனால் முன்று பயணிகள் ரயிலும் சுமார் இருபது நிமிடங்கள் முதல் முப்பது நிமிடங்கள் வரை காலதாமதமாக இயக்கப்பட்டது. பின்னர், தண்டவாள விரிசலை நிரந்தரமாக சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.