படம் பார்த்தால் மாடுகள் அதிகம் பால் கொடுப்பதாக ரஷ்யாவில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த தகவல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாஸ்கோவில் உள்ள கால்நடை ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆராய்ச்சியில் களமிறங்கினர். இதில் மாடுகள் தங்களுக்கு பிடித்த விஷயங்களை பார்க்கும் போது அதன் உடலில் மாற்றம் ஏற்படுவதை கண்டறிந்தனர். மேலும் இயற்கைக்கும் மாடுகள் பால் கறப்பதற்கும் தொடர்பு உள்ளதாகவும் அதன் மூலம் அவற்றின் பால் உற்பத்தி திறன் அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்காக மாடுகளுக்கு விர்சுவல் ரியாலிட்டி பெட்டிகளை முகத்தில் மாட்டியுள்ளனர்.
இதில் மாடுகளுக்கு மிகவும் பிடித்த வயல், புல்வெளி என அனைத்து காட்சிகளும் பதிவு செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சாதாரண நாட்களை விட இதனை பார்க்கும் போது மாடுகள் அதிகளவில் பால் கொடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் பல பரிசோதனைகள் நடைபெற இருப்பதாக மாஸ்கோ கால்நடை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.