"இந்தாண்டின் இறுதிக்குள் அனைத்து இந்தியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்" – வி.கே. பால்

இந்தாண்டின் இறுதிக்குள் அனைத்து இந்தியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று நிதி ஆயோக்கின் உறுப்பினர் வி.கே. பால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தொடர்ந்து, மேலும் சில கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

பயலாஜிக்கல்-இ, சைடஸ் கெடிலா, ஜெனோவா, நோவாவாக்ஸ் உள்பட, மொத்தம் எட்டு தடுப்பூசிகள் மூலம் ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதத்திற்குள், 216 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதில், கோவிஷீல்டு 75 கோடி டோஸ்களும், கோவாக்சின் 55 கோடி டோஸ்களும் தயாரிக்கும் பணி நடைபெறுவதாகவும்,

சீரம் இந்தியா நிறுவனம் 20 கோடி நோவாவாக்ஸ் டோஸ்களையும்,

பாரத் பயோடெக் நிறுவனம் மூக்குவழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை 10 கோடி டோஸ்கள் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பயலாஜிக்கல்-இ நிறுவனம் 30 கோடி டோஸ்களும், சைடஸ் கெடிலா நிறுவனம் 5 கோடி டோஸ்களும் தயாரிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜெனோவா நிறுவனம் வழங்கும் 6 கோடி டோஸ்களுடன், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி- தடுப்பூசியின் 15 கோடி டோஸ்களை இந்தியாவில் தயாரிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் வி.கே. பால் தெரிவித்தார்.

Exit mobile version