தமிழ்நாட்டில் முழு ஊரடங்கிலும் கொரோனா பாதிப்புகள் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 7 நாட்களில் மட்டும் 2 லட்சத்து 30 ஆயிரத்து 347பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மே 13ம் தேதி 30 ஆயிரத்து 621 ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து மே 19ம் தேதி 34 ஆயிரத்து 875 ஆக அதிகரித்துள்ளது.
பாதிப்பு எண்ணிக்கையை பொறுத்தவரை சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் கடந்த 7 நாட்களில் 43 ஆயிரத்து 991 பேர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இரண்டாவது இடத்தில் உள்ள கோவையில் 21 ஆயிரத்து 967 பேரும், செங்கல்பட்டில் 15 ஆயிரத்து 416 பேரும், திருவள்ளூரில் 11 ஆயிரத்து 673 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாசிட்டிவிட்டி ரேட் என அழைக்கப்படும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் சதவீதமும் கடந்த 7 நாட்களாக அதிகரித்து வருகிறது.
மே13ம் தேதி 1 லட்சத்து 51 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது பாதிப்பு சதவீதம் 20 புள்ளி 19 சதவீதமாக இருந்தது.
இது மே 19ம் தேதி 21 புள்ளி 47 சதவீதமாக அதிகரித்துள்ளது
உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கடந்த 7 நாட்களாக அதிகரித்து வருகிறது.
மே 13ம் தேதி 297 பேரும், மே 14ம் தேதி 288 பேரும், மே 15ம் தேதி 303 பேரும், மே 16ம் தேதி 311பேரும் மே 17ம் தேதி 335 பேரும் மே 18ம் தேதி 364 பேரும் மே 19ம் தேதி 365 தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் அதேசமயம், அதற்கு ஈடாக பாதிப்பிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது ஆறுதல் அளிக்கும் விஷயமாக உள்ளது.
மே 13ம் தேதி குணமடைபவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 287 ஆக இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை மே 19ம் தேதி 23 ஆயிரத்து 863 ஆக அதிகரித்துள்ளது