கொரோனா தடுப்பு மருந்தான கோவேக்ஸினை மனிதர்களுக்கு செலுத்தி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இன்று பரிசோதனை மேற்கொள்கிறது.
பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைராலாஜி நிறுவனம் ஆகியவை இணைந்து கொரோனா வைரசுக்கு எதிரான கோவேக்ஸின் என்ற தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்தை, மனிதர்களுக்கு செலுத்தி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று பரிசோதனை செய்யப்படுகிறது. நீண்ட கால நோய்கள் இல்லாத, ஆரோக்யமான உடல்நிலை கொண்ட 18 முதல் 55 வயதுக்குட்பட்ட 375 தன்னார்வலர்கள் மூலம் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த பரிசோதனையில் பங்கேற்க விரும்புகிறவர்கள் 7428847499 என்ற எண்ணிற்கு குருஞ்செய்தி அனுப்பலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.