கோவேக்சின் தடுப்பூசி மருந்தின் பயன்படுத்துவதற்கான காலாவதியை 24 மாதங்களாக நீட்டிக்க பாரத் பயோடெக் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுனத்தின் கோவேக்சின் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் கோவேக்சின் தடுப்பூசிகளுக்கு ஆறு மாதங்கள் வரை, இரண்டு முதல் எட்டு டிகிரி செல்சியசில் வரை குளிர்நிலையில் பதப்படுத்தி வைத்து பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்திற்கு பாரத் பயோடெக் நிறுவனம் கடிதம் ஒன்றிணை எழுதியுள்ளது.
அதில், கோவேக்சின் தடுப்பு மருந்துகள் நீண்ட நாட்கள் பதப்படுத்த முடியும் என்பதால் அதன் காலாவதி காலத்தை ஆறு மாதங்களில் இருந்து இரண்டு ஆண்டுகள் வரை நீட்டித்து அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அதற்கான ஆவணங்களை பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்திற்கு அனுப்பியுள்ளது.