கனமழை-கருமலை தடுப்பணை-உபரி நீர் வெளியேற்றம்-வெள்ளப்பெருக்கு-எச்சரிக்கை

கோவை மாவட்டம் வால்பாறையில் கருமலை தடுப்பணை நிரம்பி உபரி நீர் வெளியேறுவதால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வால்பாறையில் பெய்துவரும் பலத்த மழையால், கருமலை தடுப்பணை முழு கொள்ளளவான 30 அடியை எட்டியது. இதையடுத்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால், கருமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் அதிகமாக வருவதால், பொதுமக்கள் கரையோரம் செல்ல வேண்டாம் என நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல நீர்வரத்து அதிகரிப்பால் அப்பகுதியில் அமைந்துள்ள இறைச்சல் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version