அமலாக்கத்துறை வழக்கு: நேரில் ஆஜராக துரை தயாநிதிக்கு நீதிமன்றம் உத்தரவு

மத்திய அமலாக்கதுறை தொடர்ந்த வழக்கில் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய கோரிய முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதியின் மனுவை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் கீழவளவு பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக ஓலிம்பஸ் கிரானைட் நிறுவனர் நாகராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதி உள்ளிட்டோர் மீது கடந்த 2013 ஆம் ஆண்டு கீழவளவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், பண மோசடி செய்ததாக மத்திய அமலாக்கதுறை வழக்கு பதிவு செய்து, மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் நேரில் ஆஜராக, வேண்டும் என மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதனை எதிர்த்து துரை தயாநிதி,
உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்,மதுரை சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது என மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், மனுதாரர் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் வழக்கை நாள்தோறும் விசாரித்து, விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

Exit mobile version