கடந்த 2019 ம் ஆண்டு சின்னதடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக ஆதரவு பெற்ற சுதா என்பவரும், அதிமுக ஆதரவு பெற்ற செளந்திரவடிவு என்பவரும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது திமுக ஆதரவு பெற்ற சுதா 2 ஆயிரத்து 553 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அதிமுக ஆதரவு பெற்ற சௌந்திரவடிவு, 3 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து சுதா கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஜனவரி 24 ஆம் தேதி மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி ராஜசேகர் மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவித்தார். அதன்படி செளந்திரவடிவு இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.
மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கில் அதிமுக வேட்பாளர் வெற்றியை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது!
-
By Web team
- Categories: அரசியல்
- Tags: candidatecourt has confirmedkovairecount casevictory of the ADMK
Related Content
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கோவையில் தாமதிக்கப்படும் பணிகள்! - முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தல்!
By
Web team
August 28, 2023
தொடரும் காவலர்களின் தற்கொலைகள்! டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலையின் பின்னணி என்ன?
By
Web team
July 7, 2023
உணவுத் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு 3வது இடம்! மாவட்டங்களில் கோவை நம்பர் ஒன்!
By
Web team
June 8, 2023
ஈஷாவில் மகா சிவராத்திரி விழாவை தொடங்கி வைத்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு !
By
Web team
February 19, 2023
கோவில் உண்டியலை திருடிய மர்ம ஆசாமிகள் !
By
Web team
February 15, 2023