உணவுத் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு 3வது இடம்! மாவட்டங்களில் கோவை நம்பர் ஒன்!

இன்று சர்வதேச உணவுப் பாதுகாப்புத் தினமாகும். இந்தத் தினத்தினையொட்டி மத்திய அரசாங்கம் உணவுத் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அப்பட்டியலின்படி, தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்த உணவுத் தரவரிசைப் பட்டியலானது உணவின் தரம், அளவு, சுவை போன்றவற்றின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தப் பட்டியலில் கேராள மாநிலம் முதல் இடத்திலும், பஞ்சாப் இரண்டாவது இடத்திலும் உள்ளது. தமிழ்நாட்டிற்குள் எடுத்துக்கொண்டால் கோயமுத்தூர் மாவட்டம் முதல் இடம் பிடித்துள்ளது. மேலும் சென்னை, மதுரை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் எழுபத்தைந்து சதவீதத்திற்கு மேலான மதிப்பெண்களை பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version