குற்றப்பின்னணி குறித்த தகவல்களை வெளியிடாத வேட்பாளர்கள் மீது நீதிமன்ற அவதூறு வழக்கு – தேர்தல் ஆணையம்

தங்கள் மீதான குற்றப்பின்னணி குறித்த தகவல்களை ஊடகங்களில் வெளியிடாத வேட்பாளர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கலாம் என தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.

தெலுங்கானா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டபேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி தங்கள் மீதான குற்றப்பின்னணி குறித்த தகவல்களை ஊடகங்களில் குறைந்தது 3 முறை வெளியிட வேண்டும் என வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கான செலவை வேட்பாளரும் அவர் சார்ந்திருக்கும் அரசியல் கட்சியும் ஏற்க வேண்டும் என சுட்டிக் காட்டியுள்ள தேர்தல் ஆணையம், இது தேர்தல் செலவில் சேரும் என விளக்கம் அளித்துள்ளது. மேலும் குற்றப்பின்னணி குறித்த தகவல்களை ஊடகங்களில் வெளியிடாத வேட்பாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு அல்லது தேர்தல் வழக்கு தொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version