பொன்.மாணிக்கவேல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

சிலைக் கடத்தல் தொடர்பான ஆவணங்களை பொன்.மாணிக்கவேல் சமர்பிக்காததை தொடர்ந்து, அவர் மீது தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சிலைக் கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரியாக செயல்பட்டு வந்த பொன்.மணிக்கவேலின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, சிலைக் கடத்தல் பிரிவு புதிய ஐ.ஜி-யாக அன்பு நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து சிலைக் கடத்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உயர் அதிகாரியிடம் ஒப்படைக்கும் படி பொன்.மாணிக்கவேலுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அவர் ஆவணங்களை ஒப்படைக்காததால், தமிழக அரசு சார்பில், பொன்.மாணிக்கவேல் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Exit mobile version