தி.முக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு, அரசு தலைமை வழக்கறிஞரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.கடந்த பிப்ரவரி மாதம் சென்னயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, பட்டியலின சமுதாயத்தினருக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்று கூறினார். இந்த சர்ச்சை பேச்சு தொடர்பான புகாரில் கடந்த 23 ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. இந்நிலையில், வழக்கறிஞர் ஆண்டனி ராஜ் என்பவர், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனிடம் மனு ஒன்றை அளித்தார். அதில், நீதிபதிகள் தங்கள் திறமையால் அல்லாமல், அரசியல் கட்சிகளின் ஆதரவாலேயே அந்த பதவிக்கு வருகிறார்கள் என்பதை போல், ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு இருந்ததாகவும், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இந்த மனு வியாழக்கிழமை காணொலி மூலமாக விசாரணைக்கு வருகிறது.
Discussion about this post