"சேவல் சண்டைக்கு நீதிமன்றம் தடை"

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், சேவல் சண்டை தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

கரூர் தாந்தோணி பகுதியைச் சேர்ந்த பிரேம்நாத் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், சேவல் சண்டை போட்டிகளில், சட்டத்திற்கு புறம்பாக சேவலின் கால்களில் கத்தியை கட்டி சண்டைக்கு விடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனால், ஆண்டுதோறும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை நடைபெறுவதால், சேவல் சண்டை நடத்த தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

சேவல் சண்டை போட்டிகள் நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் எவ்வாறு சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கப்பட்டது? என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து வரும் 25ம் தேதி வரை எந்தவொரு சேவல் சண்டை நடத்தவும் தடை விதித்த நீதிபதிகள், வழக்கு குறித்து அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Exit mobile version