அரியலூரில் 10 ரூபாய் நாணயங்களை கட்டணமாக செலுத்தி உள்ளாட்சித் தேர்தலில் நூதன முறையில் மனுதாக்கல் செய்த தம்பதிகள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில், ஒரு தம்பதியினர் நூதன விழிப்புணர்வு மேற்கொண்டனர். அதன்படி வரும் ஊரக உள்ளாட்சி தேர்தலில், 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்ய வந்த சுமித்ரா – பாலமுருகன் தம்பதியினர், தாங்கள் செலுத்த வேண்டிய கட்டண தொகையான 200 ரூபாயை பத்து ரூபாய் நாணயங்களாக கொடுத்துள்ளனர். 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என பொய்யான தகவல்கள் ஒரு சில பகுதிகளில் கூறப்பட்டு வரும் நிலையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த முயற்சிகளை மேற்கொண்டதாக தம்பதியினர் தெரிவித்தனர்.