கேரளாவில் 60 – வயதுடைய ஜோடிக்கு இடையே காதல் மலர்ந்து முதியோர் இல்லத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.
கேரளாவின் திரிசூர் மாவட்டத்தில் உள்ள ராமவர்மபுரத்தில் முதியோர் இல்லம் ஒன்று அரசாங்கத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் கொச்சானியன் மேனன் ( வயது67) பி.வி.லட்சுமி அம்மால் ( வயது 66 ) இருவரும் வசித்து வருகின்றனர். 1 மாதத்திற்கு முன்பு இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.இந்த இல்லத்திற்கு வரும் முன்பே இருவரும் ஒருவருக்கு ஒருவர் தெரிந்தவர்கள்.
கடந்த 21 ஆண்டுகளுக்கு முன் பி.வி.லட்சுமி அம்மால் கணவரை இழந்துள்ளார். அப்போது கணவர் கிருஷா ஐயரின் வேலை செய்த கேட்டரிங் மையத்தில் உதவியாளராக கொச்சானியன் மேனன் பணி புரிந்துள்ளார். கணவரின் இறப்பிற்கு பிறகு கொச்சானியன் லட்சுமி அம்மாலுக்கு உதவியாக இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென கொச்சினியன் காணாமல் போனதால் லட்சுமி அம்மாள் தனது உறவினர் வீட்டில் சில நாட்கள் தங்கி வந்துள்ளார். பின் இந்த முதியோர் இல்லத்தில் சேர்ந்துள்ளார். முதியோர் இல்லத்திலேயே தனியாக வசித்து வந்த லட்சுமி அம்மாலுக்கு சந்தோஷத்தை தரும் வகையில் கொச்சானியன் அந்த முதியோர் இல்லத்தில் வந்து சேர்ந்துள்ளார்.
இதனைப் பார்த்த லட்சுமி அம்மால் காதலில் விழுந்துள்ளார்.பின் திருமணம் செய்துகொள்ள இருவரும் கடந்த 1 மாததிற்கு முன்பு முடிவெடுத்துள்ளனர்.
இதனையடுத்து இன்னும் 11 நாட்களில் திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்துள்ளனர். இந்த திருமண விழாவிற்கான பிரமாண்ட ஏற்பாடுகளை முதியோர் இல்லம் செய்து வருகிறது.சமீபத்தில் இது போன்று முதியோர் இல்லத்தில் இருப்பவர் திருமணம் செய்து கொள்ளலாம் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது