நாட்டின் அன்னிய நேரடி முதலீடு 10 சதவீதம் அதிகரித்துள்ளது -மத்திய நிதி அமைச்சகம்

நடப்பு நிதியாண்டில்,  டிசம்பர் மாதம் வரை நாட்டின் அன்னிய நேரடி முதலீடு 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் அன்னிய நேரடி முதலீடாக 652 கோடி டாலர் செய்யப்பட்டுள்ளதாகவும், இது இந்திய மதிப்பீட்டில் 48 ஆயிரம் கோடி ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், அதிகளவிலான முதலீட்டை தொலை தொடர்பு, வர்த்தகம், வாகனம் ஆகிய துறைகள் ஈர்த்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கணிணி மென்பொருள் மற்றும் வன்பொருள் துறை, 29 ஆயிரம் கோடி ரூபாயை ஈர்த்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version