5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு- 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை

நடந்து முடிந்த 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. அதற்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுகிறது. இதில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சி செய்து வருகிறது. தெலுங்கானாவில் சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும், மிசோரமில் காங்கிரஸூம் ஆட்சியில் உள்ளன. மத்திய பிரதேசத்திலும், சத்தீஸ்கரிலும் பா.ஜ.க தொடர்ந்து 3 முறை ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.க தீவிரம் பிரசாரம் செய்துள்ளது. அதே போல் விவசாய கடன் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகளுடன் பா.ஜ.க எதிர்ப்பு பிரசாரத்தை முன் வைத்து காங்கிரஸ் களமாடியுள்ளது. இந்த 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்பட உள்ளன. பிற்பகலுக்குள் முன்னிலை நிலவரங்கள் தெரிவந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கையையொட்டி, வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version