விருதுநகரில் கள்ள நோட்டு தயாரித்த 4 பேர் கைது -33,150 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டு பறிமுதல்

விருதுநகரில் கள்ள நோட்டு தயாரித்த 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து கள்ள நோட்டு அச்சடிக்கும் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

தீபாவளியையொட்டி விருதுநகரில் அமைக்கப்பட்ட சாலை ஒரக் கடைகளில் பரபரப்பாக வியாபாரம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் சிலர் கள்ள நோட்டை மாற்ற முயன்றனர். இது தொடர்பாக கிடைத்த தகவலையடுத்து நடவடிக்கை மேற்கொண்ட போலீசார், 2000 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்ற விருதுநகர் செவல்பட்டியை சேர்ந்த கோபிநாத் மற்றும் சூர்யா ஆகியோரை பிடித்தனர்.

அவர்களிடம் இருந்து 33,150 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் நடந்திய விசாரணை அடிப்படையில் ராஜபாளையம் எம்.புதுப்பட்டியை சேர்ந்த ராஜகோபால், மதுரை மாவட்டம் கவரிமான் பகுதியை சேர்ந்த இளங்கோ ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 700 ரூபாய் கள்ள நோட்டு மற்றும் கள்ள நோட்டு அச்சடிக்கும் இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Exit mobile version