குற்றால அருவியில் தண்ணீர் வரத்து நின்றதால், பாறைகளில் செதுக்கப்பட்டுள்ள சுவாமி சிலைகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
கோடைக்காலம் துவங்கிய நிலையில், குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்தின்றி, வெறும் பாறைகளாக காட்சி அளிக்கிறது. இதனால், குற்றால அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆனாலும், குற்றாலம் பாறைகளில் செதுக்கப்பட்ட சாமி வடிவங்களை, சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர். மெயின் அருவி பாறைகளில் உள்ள பழங்கால சிற்பங்களான, குற்றாலநாதர், காசி விஸ்வநாதர், சிவன், நந்தி, அம்மன் சிலை உள்ளிட்ட சிற்பங்களை, சுற்றுலாப் பயணிகள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். அவற்றைக் காண்பது மகிழ்ச்சி அளிப்பதாக சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர். அருவிகளில் சொட்டும் நீரை, காசி தீர்த்தம்போல் பிடித்து சுற்றுலா பயணிகள் தலையில் தெளித்துச் செல்கின்றனர்.