புற்றுநோய்க்கான 390 மருந்துகளின் விலை குறைப்பு

புற்றுநோய்க்கான 390 மருந்துகளின் விலையை 87 சதவீதம் வரை குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பிற மருத்துவச் செலவுகளை விட புற்று நோயாளிகளுக்கு இரண்டரை மடங்கு மருந்து செலவு அதிகமாவதைக் கருதி, ஏற்கெனவே கடந்த மாதம் 27-ம் தேதி புற்றுநோய்க்கு பரிந்துரைக்கப்படும் 42 மருந்துகளின் விலையை குறைத்தது. இதனைத் தொடர்ந்து புற்றுநோய்க்கு பரிந்துரைக்கப்படும் 390 பட்டியலிடப்படாத மருந்துகளின் விலையை, 87 சதவீதம் வரை மத்திய அரசு குறைத்துள்ளது. இது மொத்தமுள்ள புற்றுநோய்க்கு பரிந்துரைக்கப்படும் 426 மருந்துகளில் 91 சதவீதம் ஆகும். மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் நாட்டில் உள்ள 22 லட்சம் புற்றுநோயாளிகளுக்கு 800 கோடி ரூபாய் வரை செலவு மிச்சமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட மருந்துகளின் முழு விவரங்களை nppaindia.nic.in என்ற இணையதளத்தில் காணலாம்.

Exit mobile version