ஒடிசாவில் அனைத்து துறைகளிலும் ஊழல் பெருகி விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் குர்தா பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர், ஒடிசாவில் 20 சதவீதம் குடும்பங்கள் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றிருந்ததாக கூறினார். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபின், இது 70 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதாக மோடி குறிப்பிட்டார். பிரதமரின் ஜன் ஆரோக்யா யோஜானா திட்டத்தை ஒடிசா அரசு நிறைவேற்றி இருந்தால், நாடு முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில், ஒடிசா மக்கள் தரமான சிகிச்சையை இலவசமாக பெற்று இருக்க முடியும் என்று அவர் தெரிவித்தார். முன்னதாக, ஒடிசாவில் 14 ஆயிரத்து 523 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய திட்டங்களை பிரதமர் துவக்கி வைத்தார்.