ஊழல் மற்றும் கருப்புப் பணத்தை ஒழிக்க, பாஜக அரசு உறுதியான நடவடிக்கை எடுத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நடப்பு மக்களவை கூட்டத்தொடரின் இறுதி நாளில், பிரதமர் மோடி உரையாற்றினார். பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் பயன்பாட்டில் இந்தியாவின் வளர்ச்சி வியப்படையும் வகையில் இருக்கிறது என்றார். 16வது மக்களவை தான் அதிக பெண் உறுப்பினர்கள் கொண்டது என்று பெருமிதம் தெரிவித்தார்.
கருப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டதாகவும் கூறினார். பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கையில் மத்திய அரசு வெற்றிப்பெற்றிருப்பதாக கூறினார்.