அவை நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயல்படும் உறுப்பினர்கள் தானாக இடைநீக்கம் ஆகும் வகையில் மக்களவை நடத்தை விதியில் திருத்தம் செய்ய ஆட்சிமன்றக்குழு பரிந்துரை செய்துள்ளது. குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்தி முடிக்க மாநிலங்களவை தலைவர் மற்றும் மக்களவை சபாநாயகர் ஆகியோர் எதிர்கட்சி தலைவர்களுடன் கூட்டத்தொடருக்கு முன்னதாக ஆலோசனை நடத்தினர்.
ஆனால், குளிர்கால கூட்டத்தொடர் துவங்கியது முதலே எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் இரு அவை நடவடிக்கைளும் முடங்கியுள்ளன. இந்தநிலையில், அமளியில் ஈடுபடும் உறுப்பினர்கள் தானாக இடை நீக்கம் ஆகும் வகையில், மக்களவை நடத்தை விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு, ஆட்சிமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது.
இது நடைமுறைக்கு வந்தால், அமளியில் ஈடுபடும் மக்களவை உறுப்பினர்கள் 5 நாட்கள் அல்லது கூட்டத்தொடர் முழுவதும் தானாக இடை நீக்கம் ஆகிவிடுவார்கள். இந்த இரண்டு கால அளவில் எது குறைந்தபட்சமோ அது கணக்கில் கொள்ளப்படும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.