மாநகராட்சி சார்பில் முதன்முறையாக நவீன ஸ்மார்ட் கழிப்பிடம்

திருச்சி மாநகராட்சியின் சார்பில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிட்டீல்  நவீன ஸ்மார்ட் கழிவறைகள் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

கோ.அபிசேகபுரம் கோட்ட அலுவலகம் எதிரில் அமைக்கபட்டுள்ள இந்த ஸ்மார்ட் கழிவறைகளை, சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நாடராஜன், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் திறந்து வைத்தனர். பெண்கள், ஆண்கள் என இருவருக்கும் தனிதனியே அமைக்கப்பட்டுள்ள இந்த கழிவறைகளில் உள்ளே நுழைபவர்களை கண்காணிக்க 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.மேலும்  கழிப்பிடங்களை சுத்தம் செய்தவதற்காக அமைக்கப்பட்டுள்ள தானியங்கி கருவிகள் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை கழிப்பிடங்களை சுத்தம் செய்கிறது. எவரேனும் கழிவறைகளை சேதப்படுத்தினால், அங்கு பொருத்தப்பட்டுள்ள சென்சார் கருவி மூலம் குற்றவாளியின் 5 புகைப்படங்களை பதிவு செய்யும்  அளவிற்கு நவீன முறையில் ஸ்மார்ட் கழிவறைகள்  உருவாக்கப்பட்டுள்ளன.

Exit mobile version