வடக்கு இத்தாலிய மாகாணம் அல்பினோவில், 60 ஆண்டுகளாக இணைபிரியா தம்பதிகளாக வாழ்ந்து வந்த செவேரா பெலொட்டி (82 வயது), லூய்கி கராரா (86 வயது) ஆகிய இருவரும் கடந்த 10 நாட்களுக்கு முன் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டனர். கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 8 நாட்களாக தனி அறையில் எந்த ஒரு மருத்துவ உதவியும் இன்றி, 39 டிகிரி காய்ச்சலில் அவர்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் பெர்கமோ மருத்துவமனையில் ஒருவர் பின் ஒருவராக 2 மணி நேரத்திற்திகுள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அவரது மகன் லூகா கராரா, கடைசி நேரத்தில் அவர்கள் தனியாக மரணித்தது, தனக்கு மிகுந்த மனவேதனையாக இருந்ததாக தெரிவித்தார். 60 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த தம்பதி, கொரோனாவால் ஒன்றாக இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.