தேனியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்ற கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டங்களை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே இரண்டு முறை ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், நேற்று, மூன்றாவது முறையாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கொரோனா தடுப்புப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் அனைத்து அதிகாரிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் துணை முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார். தேனி மாவட்டம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டம் என்ற நிலையை அடைய  இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று துணை முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியின் முடிவில் தஞ்சை சாஸ்தா பல்கலைகழகத்தின் சார்பாக கொரோனா நோயாளிகளுக்கு மருந்துகள், உணவு, தண்ணீர் வழங்கும் விதமாக 3 ரோபோக்கள், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் முன்னிலையில், மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே ஜக்கையன் உட்பட  அதிமுகவினர் பலர் பங்கேற்றனர்.

Exit mobile version