தென் கொரியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 2 பேர் உயிரிழப்பு

தென் கொரியாவில் கொரோனா வைரஸ் காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, தடுப்பு நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு தீவிரம் காட்டி வருகிறது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, சீனாவில் 2 ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் தென் கொரியாவில், கொரோனா வைரஸ் காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, அந்நாட்டில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள உயிர்பலி 2 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், மேலும் உயிர்பலியை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை எடுத்து வருகிறது.

தென் கொரியாவில் இதுவரை 156 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. மேலும் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனாவை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version