கொரோனா வைரஸ் தாக்குதல்: அவசர நிலை பிரகடனம் பிறப்பிப்பு

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், உலக சுகாதார நிறுவனம் சர்வதேச அளவில் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் 212 பேர் பலியாகி உள்ளனர். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எட்டாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 18 நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் சீனாவுக்கு விமான சேவையை நிறுத்தியுள்ளது. உலக நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், உலக சுகாதார நிறுவனம் சர்வதேச அவசர நிலையை பிறப்பித்துள்ளது. உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version