மும்பை, டெல்லியில் சமூக தொற்றாக மாறிய கொரோனா வைரஸ்!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டதாகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் தற்போதைய உண்மை நிலையை பிரதிபலிக்கவில்லை என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூன்று லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனினும், கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் தெரிவித்துள்ளது. இதனை மறுத்துள்ள மருத்துவ நிபுணர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரவல் சமூக தொற்றாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளனர். கொரோனா சமூக தொற்றாக மாறிவிட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என எய்ம்ஸ் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் எம்.சி.மிஸ்ரா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக முன்பே மாறிவிட்டது என்றும், ஆனால் சுகாதார அதிகாரிகள் அதை ஏற்க மறுப்பதாகவும், மருத்துவ நிபுணர் ஷாகித் ஜமீல் தெரிவித்துள்ளார். டெல்லி, அகமதாபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களில் கொரோனா சமூக தொற்றாக மாறிவிட்டது என்பதை மறுக்க முடியாது எனவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version