சென்னையில் 80 பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகம்!

சென்னையில் மட்டும் 205 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டள்ள நிலையில், மண்டல வாரியாக ஏற்பட்டுள்ள பாதிப்பு . சென்னையில் கொரோனா அதிகம் பாதித்த பகுதியாக ராயபுரம் உள்ளது. அங்கு இதுவரை 63 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டள்ளது. இதற்கு அடுத்தபடியாக, திருவிக நகரில் 28 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 23 பேருக்கும், அண்ணாநகரில் 22 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டையில் 19 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடையார் மற்றும் பெருங்குடியில் தலா 7 பேருக்கும், வளசரவாக்கத்தில் 5 பேருக்கும், மாதவரத்தில் 3 பேருக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், ஆலந்தூர் மற்றும் சோழிங்கநல்லூரில் 2 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 80 பகுதிகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு அங்கு நாள்தோறும் 5 முறை கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 500 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் ஐஐடி போன்ற கல்லூரிகள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வர்த்தக மையம் போன்ற இடங்களில் 10 ஆயிரம் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், சாதாரண காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் பரிசோதனைக்கு பின் வீட்டிற்கு அனுப்பாமல் இங்கு தனிமைப்படுத்தப்படுவர் என்றும் தெரிவித்தார். தேவை ஏற்பட்டால் அண்ணா அறிவாலயம், ராகவேந்திரா மண்டபம் போன்ற தனியாரின் இடங்களும் பயன்படுத்தப்படுமென அவர் கூறினார்.

Exit mobile version