சீனாவில் இருந்து டெல்லி வந்த 17 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி

சீனாவில் இருந்து டெல்லி வந்த 17 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக இதுவரை ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனா மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து டெல்லிக்கு வந்த 5 ஆயிரத்து 700 பயணிகளில், 4 ஆயிரத்து 707 பேருக்கு கொரோனா வைரஸ் குறித்த எந்தவிதமான அறிகுறியும் இல்லை எனவும்,  இருப்பினும் அவர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் 17 பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 817 பயணிகளைத் தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version