தமிழகத்தில் மேலும் 600 பேருக்கு கொரோனா தொற்று – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 399 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 43 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 75 பேருக்கும், கடலூர் மாவட்டத்தில் 34 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செயப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 26 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 21 பேருக்கும், திருவண்ணாமலையில் 11 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 58 பேர் மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 605 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் சதவீதம் 26.7 ஆக உள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 13 ஆயிரத்து 833 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2 லட்சத்து 6 ஆயிரத்து 407 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், 4 ஆயிரத்து 361 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 பேர் பலியானதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

 

Exit mobile version