சென்னையில் மண்டலவாரியாக கொரோனா தொற்று எண்ணிக்கை!!

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45 ஆயிரத்து 814ஆக உயர்ந்துள்ள நிலையில், மண்டல வாரியாக பாதிப்பு நிலவரங்களை பார்க்கலாம்…

அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 837 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, தண்டையார்பேட்டையில் 5 ஆயிரத்து 531 பேரும், தேனாம்பேட்டையில் 5 ஆயிரத்து 316 பேரும், அண்ணாநகரில் 4 ஆயிரத்து 922 பேரும், கோடம்பாக்கத்தில் 4 ஆயிரத்து 908 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். திரு.வி.க. நகரில் 3 ஆயிரத்து 896 பேரும், அடையாறில் 2 ஆயிரத்து 777 பேரும், வளசரவாக்கத்தில் ஆயிரத்து 957 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவொற்றியூரில் ஆயிரத்து 755 பேருக்கும், அம்பத்தூரில் ஆயிரத்து 741 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

 

Exit mobile version