இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 25 ஆயிரத்தை தாண்டியது.

கடந்த 24 மணி நேரத்தில் 14 ஆயிரத்து 821 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 25 ஆயிரத்தை கடந்துள்ளது. ஒரு லட்சத்து 74 ஆயிரம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இரண்டு லட்சத்து 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ள மகாராஷ்டிராவில், ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 75 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. டெல்லியில் 59 ஆயிரத்து 746 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் 59 ஆயிரத்து 377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 32 ஆயிரத்து 754 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குஜராத்தில் 27 ஆயிரத்து 260 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 17 ஆயிரத்து 731 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ராஜஸ்தானில் 14 ஆயிரத்து 930 பேரும், மேற்குவங்கத்தில் 13 ஆயிரத்து 945 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசம், கர்நாடகா, பீகார் போன்ற மாநிலங்களிலும் பாதிப்பு அதிகரித்துள்ளது.

 

Exit mobile version