இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் 2ம் கட்ட நிலையில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெளிவுப்படுத்தியுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால், இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் 2ம் கட்ட நிலையில் உள்ளது என்று தெரிவித்தார். மிக ஆபத்தான நிலையாக கருதப்படும் 3ம் கட்ட நிலையான “சமூக பரவல்” கட்டத்தை இந்தியா எட்டவில்லை என்றும் அவர் தெரிவித்தார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சமூக பரவல் கட்டத்தை எட்டாத வகையில் அனைத்தும் நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். மக்களும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை கட்டாயம் கடைபிடித்தால் மட்டுமே நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.