சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியவில்லை என்று அதிபர் ஷி ஜின்பிங் கைவிரித்துள்ளார்.
சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் வுகான் நகரின் விற்கப்படும் சுகாதாரமற்ற இறைச்சியில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது. இந்த நிலையில், சீனாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸுக்கு 15 பேர் மரணம் அடைந்து உள்ளனர். இதனால் வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளது.
பலியானோர் அனைவரும் 55 வயது முதல் 87 வயதுக்கு உட்பட்டவர்கள். 2 ஆயிரத்து 300 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, கொரோனா வைரஸ் சீனாவில் அசாதாரணமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே இடத்தில் சிகிச்சை அளிக்க இரண்டு மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருவதாகவும், கொரோனா வைரஸை சீன அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் அதிபர் ஷி ஜின்பிங் கூறியுள்ளார்.