தமிழகத்தில் புதிதாக 669 பேருக்கு கொரோனா தொற்று

புதிதாக 669 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 204 ஆக அதிகரித்துள்ளது.  புதிதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 669 பேரில் 412 பேர் ஆண்கள் என்றும், 257 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 839 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 47 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 43 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செயப்பட்டுள்ளது.

நெல்லை மற்றும் கிருஷ்ணகிரியில் தலா 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 135 பேர் குணமடைந்தனர். இதனால் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 1959 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் சதவீதம் 27.19 ஆக உள்ளது.

Exit mobile version