சென்னையில் கொரோனா பரிசோதனை செய்தால் 14 நாட்கள் தனிமை!

சென்னையில் கொரோனா பரிசோதனை செய்பவர் மற்றும் அவரது குடும்பத்தினர் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் அனுமதி பெற்ற பரிசோதனை மையங்களின் பிரதிநிதிகள் உடன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆலோசனை நடத்தினர். அப்போது, கொரோனா பரிசோதனை மையங்களுக்கு வருபவர்களின் முழு விவரங்களை, அதற்கென உருவாக்கப்பட்ட கைபேசி செயலி மற்றும் சி.வி வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். பரிசோதனை செய்பவரின் தொழில் விவரம், 15 நாட்களில் அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் தகவல்களை மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். பரிசோதனை செய்பவர் மற்றும் அவரது குடும்பத்தினர் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க 6 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட உள்ளதாகவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார்.

Exit mobile version