கொரோனா தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் : முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!

கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் ஏற்கனவே மூன்று ஆலோசனை நடத்திய நிலையில், இன்று 4ஆவது முறையாக ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். மாவட்ட வாரியாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேட்டறியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளார்.

Exit mobile version