கொரோனாவால் முடங்கி கிடக்கும் பட்டாசு ஏற்றுமதி!!

ஊரடங்கால் பட்டாசு ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதால், சிவகாசியில் ஏராளமான பட்டாசுகள் தேக்கமடைந்துள்ளன.

விருதுநகர் மாவட்டம் மற்றும் சிவகாசி வட்டாரத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் லாரிகள் மூலமாக இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்படுவது வழக்கம். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் சிவகாசியிலிருந்து பட்டாசுகள் ஏற்றிச்செல்லும் லாரிகள் அனைத்தும் இயக்கப்படவில்லை. இதனால் சுமார் 40 லட்சம் ரூபாய்க்கு மேல் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு நிபந்தனைகளுடன் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டாலும், 10லாரிகள் இயக்கப்படும் இடத்தில் 2 லாரிகள் மட்டுமே இயக்கப்படுவதால், பெரும் நஷ்டம் அடைந்துள்ளதாக உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே பட்டாசு ஏற்றுமதிக்கு அரசு அனுமதியளிக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version