கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை ஜேசிபி-யில் கொண்டுச் செல்லும் அவலம்!

ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை ஜேசிபியில் எடுத்துச் சென்ற விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஸ்ரீகாகுளம் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தையடுத்து எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உயிரிழந்தவர்களின் உடல்கள் ஜேசிபியிலும், டிராக்டரிலும் எடுத்து செல்லப்படுவது அதிர்ச்சியளிப்பதாக, முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் போது இதுபோன்று மனிதாபிமானமின்றி நடந்து கொள்வது, ஜெகன் மோகன் அரசுக்கு பெரிய தலைகுணிவு எனவும் அவர் விமர்சித்துள்ளார். இந்த நிலையில், இந்த சம்பவம் எதேச்சையாக நடைபெற்றது எனவும் ஆந்திராவில் வேறு எங்கும் இது போன்று நடப்பதில்லை எனவும் மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது. கொரோனால் இறந்தவர்களின் உடல்களை ஜேசிபியில் எடுத்து சென்ற சம்பவம் தொடர்பாக நகராட்சி அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version