இந்தியாவில் கடந்த 7 நாளில் 80 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை!

இந்தியாவில் கடந்த 7 நாட்களில் 80 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொரோனா தடுப்புப் பணியில் முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். இந்தியாவில், கடந்த 14 நாட்களில் 47 மாவட்டங்களில் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறிய அவர், கடந்த 7 நாட்களாக 80 மாவட்டங்களில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று கூறினார். இந்தியாவில் வெண்டிலேட்டர்கள் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளதாகவும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான தற்காப்பு உடைகள் மற்றும் சாதனங்கள் தயாரிப்பதற்காக 100 நிறுவனங்கள் செயல்பட்டுவருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்கூறினார்.

Exit mobile version