இந்தியாவிலேயே கொரோனா இறப்பு சதவீதம் தமிழகத்தில் தான் குறைவு என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மதுரை உலக தமிழ் சங்க வளாகத்தில் கொரோனோ நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை போன்ற நிலை மதுரையில் ஏற்படாமல் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். பரிசோதனையை அதிகப்படுத்துவதும், வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.