இந்தியாவில் 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 525 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், எண்ணிக்கை 74 ஆயிரத்து 281 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 122 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 415 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 427 ஆக அதிகரித்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 921 ஆக உயர்ந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் 8 ஆயிரத்து 903 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 718 ஆக உயர்ந்துள்ளது. 2 ஆயிரத்து 134 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில் 7 ஆயிரத்து 639 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ராஜஸ்தானில் 4 ஆயிரத்து 126 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 3 ஆயிரத்து 986 பேரும்,உத்தரப் பிரதேசத்தில் 3 ஆயிரத்து 664 பேரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இதேபோன்று, ஆந்திரா, பஞ்சாப், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவில் 24 ஆயிரத்து 386 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.