உலகளவில் 62 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு!!

உலகளவில் கொரோனா வைரஸால் 62 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை மூன்று லட்சத்து 73 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் அமெரிக்காவில் தொடரும் நிலையில், அங்கு ஒரு லட்சத்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 லட்சத்து 37 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பிரேசிலில்  5 லட்சத்து 14 ஆயிரம் பேரும், ரஷ்யாவில் 4 லட்சத்து 5 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் 2 லட்சத்து 86 ஆயிரம் பேரும், இங்கிலாந்தில் 2 லட்சத்து 74 ஆயிரம் பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இத்தாலியில் 2 லட்சத்து 32 ஆயிரம் பேரும், பிரான்ஸில் ஒரு லட்சத்து 88 ஆயிரம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று, ஜெர்மனி, பெரு போன்ற நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை சுமார் 28 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

Exit mobile version