மும்பை கடற்படைத் தளத்தில் 20 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

மும்பை கடற்படை தளத்தில் 20 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில், மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் 3 ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் உள்ள ஐ.என்.எஸ் ஆங்ரே குடியிருப்பு விடுதியில் தங்கியிருந்த 20 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கடற்த 7 ஆம் தேதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இவர்களுக்கு தற்போது பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும், மும்பையில் உள்ள கடற்படை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். முதலில் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு, தற்போது தொற்று இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version