இந்தியாவில் 4.55 லட்சத்தை கடந்த கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 56 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 476 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக டெல்லியில் 66 ஆயிரத்து 602 பேரும், தமிழகத்தில் 64 ஆயிரத்து 603 பேரும், குஜராத்தில் 28 ஆயிரத்து 371 பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் 18 ஆயிரத்து 893 பேருக்கும், ராஜஸ்தானில் 15 ஆயிரத்து 627 பேருக்கும், மேற்குவங்கத்தில் 14 ஆயிரத்து 728 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் 12 ஆயிரத்து 261 பேரும், ஹரியானாவில் 11 ஆயிரத்து 520 பேரும் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளனர். ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 2 லட்சத்து 58 ஆயிரத்து 685 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 

 

Exit mobile version