கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதி!

கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், சந்தையை இடமாற்றம் செய்வது தொடர்பாக வணிகர்களுடன், அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கோயம்பேடு சந்தையை இடம்மாற்றம் செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது. சிஎம்டிஏ செயலர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ஆகியோர், வணிகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். கோயம்பேடு பேருந்து நிலையம், வண்டலூர் பேருந்து நிலையம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையயங்களுக்கு கோயம்பேடு சந்தையை இடமாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

Exit mobile version