உலகளவில் 74 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 16 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

உலகிலேயே கொரோனா தொற்றால் அதிக பாதிப்புக்குள்ளான அமெரிக்காவில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்து 60 ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு, ஒரு லட்சத்து 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் 7 லட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், ரஷ்யாவில் 4 லட்சத்து 93 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் 2 லட்சத்து 90 ஆயிரம் பேரும், ஸ்பெயினில் 2 லட்சத்து 89 ஆயிரம் பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில் 2 லட்சத்து 87 ஆயிரம் பேரும், இத்தாலியில் 2 லட்சத்து 35 ஆயிரம் பேரும், பெருவில் 2 லட்சத்து 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதேபோன்று, ஜெர்மனி, ஈரான் போன்ற நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை, உலகம் முழுவதும் சுமார் 37 லட்சத்து 9 ஆயிரம் பேர், நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version